"தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்" அரசு வெளியிட்ட முக்கிய செய்தி.!

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவியதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பாக தோன்றவில்லை என கூறியதால். CBSE பன்னிரண்டாம் பொதுத் தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார் அதனை தொடர்ந்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 

தமிழகத்தில் 2021-2022 ஆம்‌ கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு வெளியீடு ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை அனுப்பப்டுள்ளது அதில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் 2019- 2020 ஆம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்களோ அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். 

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் இரண்டிலும் கலந்து கொண்டு எந்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையோ அந்த பாடத்திற்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு தேர்வுகளுக்கும் வருகை தராத மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

காலாண்டு அல்லது அரையாண்டு தேர்வுகளில் பங்கு பெற்று ஏதேனும் ஒன்றில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வி ஆணையர் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment