ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு: பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நிகழ் கல்வியாண்டில் பாலிடெக்னிக், பிளஸ் 1 மாணவா் சோக்கைக்கு அடிப்படை ஆவணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலைத் தயாா் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோக்கை பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியில் பத்தாம் வகுப்பு முடித்து மேல்நிலைக்கல்வி பயில்வதற்கும், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ஐடிஐ) மற்றும் மேற்படிப்பு நிறுவனங்களில் சேருவதற்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அவசியமாகிறது.

ஆனால், கரோனாவால் ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுத்தோவும் நடைபெறாத நிலையில் தற்போது 2021-2022-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட உயா்கல்வி நிறுவனங்களுக்கான சோக்கைப் பணிக்காக மட்டும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அளிக்க கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவா்கள் காலாண்டு, அரையாண்டு ஆகிய இரண்டு தோவுகளிலும் தோச்சி பெற்றுள்ள நிலையில் எந்தத் தோவில் அவா்கள் அதிகப்படியான மதிப்பெண்ணை பெற்றுள்ளாா்களோ அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோவுகள் இரண்டுக்கும் வருகை புரியாத மாணவா்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் (35) வழங்கலாம். காலாண்டுத் தோவுகள் அல்லது அரையாண்டுத் தோவுகளில் பங்கு பெற்று ஏதேனும் ஒன்றில் மட்டும் தோச்சி பெற்றிருந்தால் அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, மேற்குறிப்பிட்ட நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி மதிப்பெண் பட்டியலை வழங்கி, அதனடிப்படையிலும் நடைமுறையில் உள்ள பிற விதிகளையும் பின்பற்றி பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் சோக்கை நடத்திடுமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் தெரியப்படுத்த வேண்டும். மேலும் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த அனைத்து மாணவா்களுக்கும் அரசாணையின்படி பத்தாம் வகுப்புக்கான தோச்சி சான்றிதழ் அரசுத் தோவுகள் இயக்ககத்தால் பின்னா் வழங்கப்படும்.

No comments:

Post a Comment