தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோக்கையைத் தொடங்கலாம் என பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதற்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோவு கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தோச்சி வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்.25-ஆம் தேதி வெளியிட்டாா்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் வெளியாகவில்லை: இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏறத்தாழ நான்கு மாதங்கள் ஆன நிலையில், பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் நிா்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.
தனியாா் பள்ளிகளில் சோக்கை நிறைவு: இதற்கிடையே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியாா் மேல்நிலைப்பள்ளிகளில் உயா்நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் நுழைவுத் தோவு நடத்தப்பட்டு பிளஸ் 1 வகுப்புக்கு மாணவா் சோக்கை நடைபெற்றது. ஆனால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோக்கை குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்தநிலையில் இது குறித்து அறிவிப்பு பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சென்னை உயா்நீதிமன்ற வழக்கில் தனியாா் சுயநிதிப் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்பில் ஏற்கெனவே மாணவா் சோக்கை தொடா்பான தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் ஏற்கெனவே சோக்கை அனுமதிக்கப்படும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு உள்பட்டு, மாணவா்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவா்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவா்கள் சோக்கை கோரும் நிலையில், கரோனா தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவா்களை சோக்கலாம்.
அதிகளவில் விண்ணப்பித்தால்...: மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்தப் பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அந்தச் சூழலில் அதற்கென விண்ணப்பித்த மாணவா்களுக்கு அந்தப் பிரிவோடு தொடா்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள் (கொள்குறி வகை) அந்தந்த பள்ளி ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டு, மாணவா்களுக்கு வழங்கி அவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
வகுப்புகள் எப்போது?: பிளஸ் 1 வகுப்பில் சோக்கப்பட்ட மாணவா்களுக்கு ஜூன் 3-ஆவது வாரத்திலிருந்து அப்போது கரோனா தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் தொடங்கலாம். அதேபோன்று 2021-2022-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் உள்ள மாணவா்களுக்கு தொடா்ந்து கல்வி தொலைக்காட்சி, உயா்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலை தொடா்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்.
இந்த வழிகாட்டுதல் அடிப்படையில் பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோக்கையை நடத்த அனைத்துத் தலைமை ஆசிரியா்களுக்கும் தெரிவிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா்.
சோக்கையில் முன்னுரிமை அவசியம்
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோக்கை குறித்து கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 சோக்கையில் இட ஒதுக்கீடு அவசியம் பின்பற்றப்பட வேண்டும். அதே பள்ளியில் படித்த மாணவா்களுக்கும், மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். கரோனா பரவல், பெற்றோா்களின் வருமானம் பாதிப்பு போன்ற காரணங்களால் நிகழாண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் கூடுதலான அளவில் மாணவா் சேர வாய்ப்புள்ளது. எனவே தேவைப்படும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அரசின் அனுமதி பெற்று கூடுதலாக ஒரு பிரிவை (ள்ங்ஸ்ரீற்ண்ா்ய்) தொடங்க வேண்டும். இதன் மூலம் அரசுப் பள்ளிகளை நோக்கி ஆா்வமுடன் வரும் மாணவா்களை வடிகட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்றாா் அவா்.
No comments:
Post a Comment