இனி ஞாயிற்றுக்கிழமையும் சம்பளம் வரும்!!

இதுவரை அனைத்து ஊழியர்களுக்கு வங்கி செயல்படும் தினங்களில் மட்டுமே சம்பளம், பென்சன் போடப்பட்டு வரும் நிலையில், இனி ஆண்டு முழுவதும் எல்லா நாட்களிலும் சம்பளம் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தின் போது ஆர்பிஐ ஆளுநர் சக்திகந்தா தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (NACH) பரிவர்த்தனை அமைப்பு ஆண்டு முழுவதும் செயல்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆண்டு முழுவதும் RTGS சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எல்லா வாரங்களிலும் எல்லா நட்களிலும் NACH எனப்படும் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் பரிவர்த்தனை அமைப்பை செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது என்றார்.

ஒரு இடத்தில் இருந்து பலருக்கு பணம் அனுப்ப NACH அமைப்பு பயன்படுகிறது. சம்பளம், பென்சன், வட்டி, டிவிடெண்ட் போன்றவற்றை அனுப்ப இந்த அமைப்பு பயன்படுகிறது.

தற்போது NACH அமைப்பு வங்கி செயல்படும் நாட்களில் மட்டுமே இயங்குகிறது. இந்நிலையில், ஆண்டு முழுவதும் NACH அமைப்பை இயக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. இதன் விளைவாக, ஞாயிற்றுக் கிழமைகள், விடுமுறை நாட்களிலும் அனைவரும் சம்பளம் பெற முடியும்.

No comments:

Post a Comment