அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்பு: இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடுகிறார்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வரும் இலவச பயிற்சி வகுப்பில் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு, மாணவர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், அரசுப்பள்ளி மாண வர்களின் நலன் கருதி மாவட்ட கல்வித்துறை சார்பில் இணைய வழியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இதில், ஆம்பூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரவணன், ஜெயசீலன், வாணியம் பாடியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் அருண்குமார் ஆகியோர் ஒன்றிணைந்து 'இன்னோவேட்டிவ் டீச்சர் டீம்' என்ற அமைப்பு மூலம் அரசுப்பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இப்பயிற்சி வகுப்பில் ரோபோடிக்ஸ் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், ஒரிகாமி, கோடிங், பப்பட், மைன் கிராப்ட், போட்டித்தேர்வில் பங்கேற்பது, அத்தேர்வு களில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது குறித்த பல்வேறு பயிற்சிகள் ஆன்லைன் வாயிலாக அரசுப்பள்ளி மாணவர் களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அரசுப்பள்ளி ஆசிரி யர்கள் சரவணன் மற்றும் அருண்குமார் தெரிவித்தனர்.

இது குறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம், அவர்கள் மேலும் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முயற்சியால் அரசுப்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 'இன்னோவேட்டிவ் டீச்சர் டீம்' என்ற அமைப்பு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் திருப்பத்தூர் மாவட்டம் மட்டும் அல்லாமல் மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந் துள்ளனர்.

'வாட்ஸ்-அப் லிங்க்'

ஆன்லைன் மூலம் மாண வர்களுக்கு ரோபோடிக்ஸ் செயல் பாடு, போட்டித்தேர்வுகள், மைன் கிராப்ட் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரு கின்றன. இதற்கான தனித்திறமை வாய்ந்த ஆசிரியர்கள் எங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாளை (இன்று) நடைபெறும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு, அறிவியல் பாடம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இதற்கான லிங்க் ஏற்கெனவே மாணவர்களின் வாட்ஸ் -அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த லிங்க் மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே இணைந்தால் அவர் களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

நாளை (இன்று) மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். இதில், திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர் விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.

இதை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் 97868-84566, 95970-63944, 70100-07298 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்திலேயே, முதல் முறையாக அரசுப்பள்ளி மாண வர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் இதுபோன்ற பயிற்சி வகுப்பு நடைபெறுவது பெருமைக்குரியது'' என்றனர்.

No comments:

Post a Comment