டயட் கொழுக்கட்டை..!!

விநாயார் சதுர்த்தி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான் . அந்த கொழுக்கட்டைகளை டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு புதிதாக டயட் கொழுகட்டை .

தேவையான பொருட்கள் :

ராகி மாவு - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கையளவு
துருவிய தேங்காய் - 1/4 கப்
பொடித்த வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்


செய்முறை :

முதலில் பாசிபருப்பை வேகவைத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் ராகி மாவை வறுத்து எடுத்து கொள்ளவும். அடுத்து வெல்லத்தை பாகு காய்ச்சி எடுத்து கொள்ளவும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். அதனை கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.

இட்லி பானையில் வேகவைத்து எடுத்தால் டயட் கொழுக்கட்டை தயார்.

No comments:

Post a Comment