10-ம் வகுப்பு முதல்பருவ பொதுத்தேர்வு ஆங்கில பாட வினாத்தாளில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்விகள் நீக்கம் செய்யபட்ட கேள்விக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு ஆங்கில முதல்பருவ பொதுத்தேர்வு ஆங்கில பாட வினாத்தாளில் “பிற்போக்கு கருத்துக்களை” ஆதரிக்கும் விதமாக கேள்விகள் கேட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வில், வினாத்தாளில் “பெண் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்தது” மற்றும் “கணவரின் வழியை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஒரு தாய் இளையவர்களை விட கீழ்ப்படிதலைப் பெற முடியும்” போன்ற வாக்கியங்களுடன் கேள்வி இடம்பெற்றது. இது போன்ற கேள்விகளை கேட்டதற்கு பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற கேள்விகள் பெண்கள் மீதான பிற்போக்குத் தனத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்கின்றது. மேலும் பிற்போக்குத்தனமான கருத்துக்களை பாஜக அரசு ஆமோதிக்கிறது என தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் பெண் அடிமைத்தனம் தொடர்பாக கேள்வி இடம்பெற்றிருந்ததற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், பத்தாம் வகுப்பு முதல் பருவத்தேர்வு ஆங்கில பாட வினாத்தாளில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கேள்விக்கு அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment