TNPSC தேர்வுகளில் 14000 காலி பணியிடங்கள்!

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 4 பிரிவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. கொரோனா காலமாக கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த குரூப் 1,2,3,4-க்கான தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது இரண்டிலும் மொத்தமாக சுமார் 11 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குரூப் 2, 2 ஏ பணிகளில் 5,381 காலியிடங்கள் இருக்கின்றன. குரூப் 4 பணிகளில் 5,255 காலியிடங்கள் இருக்கின்றன. மேலும், கூடுதலாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை துறை வாரியான காலியிடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு தேர்வுகளும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 14 ஆயிரம் காலியிடங்களுக்காக அடுத்த ஆண்டு தேர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment