கல்லீரல் நச்சுக்களை நீக்கும் உணவுகள்

1. சூடான நீர் மற்றும் எலுமிச்சை

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. 

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழ சாற்றை கலந்து குடிப்பது உங்களுக்கு மிகப் பெரிய ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.

2. மஞ்சள்

எலுமிச்சையைத் தவிர, மஞ்சளை உட்கொள்வது கல்லீரிலின் நச்சுக்களை அகற்றுவதில் பெரிதும் நன்மை பயக்கும். 

மஞ்சள் ஒரு என்சைம் பூஸ்டராக செயல்படுகிறது, இது உணவுடன் வயிற்றுக்குள் சென்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

3. நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாறு கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க வல்லது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். 

ஆம்லா எனப்படும் நெல்லிக்காயில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

4. கீரை

கீரைகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கான இயற்கையான தீர்வாகும். வேண்டுமானால் சாறு எடுத்து அருந்தலாம். 

இதனை சாதாரண முறையில் சமைத்து சாப்பிடுவதும் நலல் பலனைத் தரும்.

இந்த விஷயங்களை தவிர்க்கவும்

உங்கள் கல்லீரலை வலிமையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க விரும்பினால், ஜங்க் ஃபுட், சிகரெட், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்கவும்.

No comments:

Post a Comment