இது கொழுப்பைக் குறைப்பது மட்டுமின்றி, தொப்பையை கரைக்கவும் உதவும். தினமும் இரவில் தூங்கும் முன், இந்த ஸ்பெஷல் ஜூஸை குடித்து வந்தால், சில வாரங்களில் வித்தியாசத்தை பார்க்கலாம். இந்த ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு சிறப்பாக எதுவும் தேவையில்லை. இவை அனைத்தும் உங்கள் வீட்டில் இருக்க கூடிய பொருட்கள் இருந்தால் போதும். இந்த ஸ்பெஷல் ஜூஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்
1. 1 எலுமிச்சை துண்டு
2. 1 கப் தண்ணீர்
3. 1 வெள்ளரிக்காய்
4. 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி
5. 1 தேக்கரண்டி கற்றாழை சாறு
6. கொத்தமல்லி இலைகள்
ஜூஸ் செய்யும் முறை
முதலில் இந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். பின்னர் அதனை வழிகட்டி ஒரு கப் குடிக்கவும். இதில் ஜூஸை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைகிறது. இது உங்கள் உடல் பருமனை குறைக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் இந்த ஜூஸை தினமும் இரவில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். இந்த ஜூஸ் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துவதோடு, நீங்கள் தூக்கத்தில் இருக்கும்போது கூட, உங்கள் வளர்சிதை மாற்றத்தை சுறுசுறுப்பாக இருக்கு செய்கிறது. இதன் மூலம், உடல் பருமனை மிகவும் குறையும். குறிப்பாக இது தொப்பையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment