தமிழகத்தில் கொரோனா குறைந்த பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பள்ளிகளில் நூலக பாடவேளைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாடவேளைகள் கட்டாயம் நடத்த வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் நூலகங்களின் பயன் மாணவர்களுக்கு கிடைக்காமல் போகிறது.
நூலக பாடவேலைகள் முறையாக நடத்தப்படவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் வாரம் ஒருமுறை நூலக பாடவேளைகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கென தனி அறை ஒதுக்க வேண்டும். மாணவர்கள் நூலகங்களில் இருந்து புத்தகங்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கவும் அனுமதி வழங்க வேண்டும். இதற்கான பதிவேட்டை பராமரிக்கவேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகத்தை அவர்கள் படித்து முடித்ததும் அவர்களுக்கு கட்டுரைகள், நூல் அறிமுகம் செய்தல் போன்ற போட்டிகளை நடத்த வேண்டும். விருப்பம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து வாசகர்வட்டம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment