இன்று உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் வால்நட் என்னும் வாதுமைக் கொட்டை (Walnut), மூளைக்கு மிகவும் நல்லது என அனைவரும் அறிந்ததே.
ஆனால், அது மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள உலர் பழமாகும். வாதுமை கொட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.
வாதுமை கொட்டையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
வால்நட்ஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் காணப்படுகின்றன, இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவதோடு, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. புரதம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், தாமிரம், செலினியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல சத்துக்களும் இதில் உள்ளன.
ஊறவைத்த வாதுமை கொட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நல்ல தூக்கம்
எடையை கட்டுக்குள் வைக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது.
செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது
இதில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம் எலும்புகளை பலப்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
வாதுமை கொட்டையை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் சாப்பிட்டால், அதன் ஆரோக்கிய நன்மைகள் பன் மடங்கு அதிகரிக்கும்.
வாதுமை கொட்டையை அப்படியே சாப்பிடுவதற்குப் பதிலாக, ஊறவைத்துச் சாப்பிடவேண்டும் என கூறுவதற்கு இதுவே காரணம்.
இதற்கு இரவில் தூங்கும் முன் 2 அக்ரூட் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
ஆண்களுக்கு நன்மை பயக்கும் வாதுமை கொட்டை
ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி, வாதுமை கொட்டை குறித்து கூறுகையில், இது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வாதுமை கொட்டை விந்தணு தரத்தை மேம்படுத்துகிறது. விந்தணுவின் இயக்கம், ஆற்றல் ஆகியவை மேம்படும். இதன் மூலம் பாலியல் பலவீனம் நீங்குகிறது.
No comments:
Post a Comment