ஏப்ரலில் நிகழும் 4 கிரக மாற்றம். இந்த ராசிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்!

ஏப்ரல் 22 ஆம் தேதி வியாழன் மேஷ ராசிக்குள் நுழைகிறார்.

இதை தொடர்ந்து, புதன், சுக்கிரன் மற்றும் சூரியனும் தங்களின் ராசியை மாற்றுகின்றனர். குறிப்பாக புதன் திரிபு பெயர்ச்சி செய்ய உள்ளது. அதாவது, பின்னோக்கி நகர்கிறது. சூரியன் ராகுவுடன் இருப்பதால் ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து கிரக யோகமும் ஏற்படும். ஆனால், இந்த மாதத்தில் ராகுவுடன் வியாழன் இணைவதால் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால், பல ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் நிறைய ஏற்ற தாழ்வுகளை சந்திப்பார்கள். இருப்பினும், சில ராசிக்காரராகள் நல்ல பலனை மட்டும் பெற உள்ளனர். அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.


ரிஷபம் : ஏப்ரலில் நடைபெறும் கிரக பெயர்ச்சியால், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். குறிப்பாக, குரு பெயர்ச்சியால் உங்களின் வாழ்க்கையில் பல அதிஷ்டங்கள் நிகழ வாய்ப்புள்ளது. நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இதுவரை இருந்த கடன் தொல்லை மற்றும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும், அதிக லாபத்தை பெறுவீர்கள்.


மிதுனம் : புதன் இந்த மாதம் உங்கள் சுப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். மேலும், ராகு சேர்வதால் உங்களின் செல்வாக்கும், சுயமதிப்பும் அதிகரிக்கும். வணிக தொழில் செய்பவர்கள் இந்த மாதம் வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்ல தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது இன்னும் சிறப்பானது.


கடகம் : ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் கிரக சஞ்சாரத்தால், நீங்கள் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். முதலீடு, தொழில் துவங்க உங்களுக்கு சிறப்பான மாதம் இது. நீண்டநாளாக தடைப்பட்டிருந்த வேலைகள் நண்பர்களின் உதவியால் சிறப்பாக முடிவடையும். உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


கும்பம் : கும்ப ராசிக்கு ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பான மாதம். இந்த மாதத்தில் ஏற்படும், கிரக மாற்றத்தால், தடைபட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். இதுமட்டுமின்றி நண்பர்களின் உதவியால் உங்களின் பிரச்னைகள் சுலபமாக தீர்க்கப்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்தாலும், ஒற்றுமை நிலவும். சொத்து குறித்த பிரச்னைகள் அனைத்தும் எளிதில் தீர்வதற்கான வாய்ப்பு அதிகம்.


மீனம் : ஏப்ரலில் ஏற்படும் கிரக மாற்றத்தால், பண விஷயத்தில் இந்த மாதம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது. நீங்கள் நினைத்துப் பார்க்காத வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த வாரம் சில நல்ல செய்திகளையும் பெறலாம். இதனால் உங்கள் மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

No comments:

Post a Comment