ஜோதிடத்தில், புதன் மற்றும் வியாழன் இணைவு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில், கடந்த சனிக்கிழமை புதனும் வியாழனும் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரித்தனர். புதன் தர்க்கத்திற்கு பொறுப்பான கிரகமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் வியாழன் அறிவுக்கு பொறுப்பான கிரகமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், எந்த ராசிக்காரர்களுக்கு வியாழன் மற்றும் புதன் சேர்க்கை பலன் அதிகமாக கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

மேஷம் :
புதன் மற்றும் வியாழன் இணைவதால், மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். அதே சமயம் சொத்து குறித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புது சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வரும் காலங்களில் பணம் சம்பாதிக்க பல நல்ல வாய்ப்புகளையும் பெறுவீர்கள். மார்ச் கடைசி வாரத்தில், உங்கள் உடன்பிறந்தவர்களிடமிருந்தும் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம் :
மிதுன ராசிக்கு புதன், வியாழன் இணைவு நல்ல பலனை கொடுக்கும். இந்த கால கட்டத்தில், உங்கள் வாழ்க்கையில் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். வாழ்க்கையில் பல முன்னேற்றத்தை பெறுவீர்கள். அதுமட்டுமின்றி சொத்து, நிலம், வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். உழைக்கும் வர்க்கத்தினர் தங்கள் கடின உழைப்புக்கு பாராட்டுக்களைப் பெறுவதுடன் அதற்கான பலனையும் பெறுவார்கள்.

விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் புதன் மற்றும் வியாழன் இணைவு நிகழ்ந்துள்ளது. ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் மங்களகரமானது மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும், உங்களின் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலையும் வலுவாக இருக்கும்.

தனுசு :
தனுசு ராசியினருக்கு வியாழன் மற்றும் புதன் இணைதல் அற்புதமாக காலகட்டத்தை வழங்கும். புதிய நிலம் அல்லது வேறு ஏதேனும் சொத்து வாங்க நினைத்தால், அதற்கான நேரம் இது. தொழில் வாழ்க்கையை பொறுத்தவரை, நீங்கள் வேலையை மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறலாம். வேலைகளை மாற்றுவது உங்கள் வாழ்க்கையில் சாதகமான முடிவுகளைத் தரும்.

கும்பம் :
கும்ப ராசிப்படி வியாழன் மற்றும் புதன் இணைவதால் அதிஷ்டம் வலுவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு உங்கள் வார்த்தைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இந்த காலம் வணிக வர்க்கத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலம் ஆசிரியர்களுக்கு மிகவும் சாதகமானது.
No comments:
Post a Comment