பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களின் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.
2022-23 ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 2022-23 ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு மார்ச் 14 துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 3,60, 908 மாணவர்கள், 4,12,779 மாணவிகள் என மொத்தமாக 7,73,688 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்
அதேபோல 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 தேதி துவங்கி ஏப்ரல் 20ம் தேதி நடைபெற்றது. 9, 38, 291 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கும், 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment