மகளிருக்கு அரசு வழங்கும் 60% மானியம்‌.! எப்படி பெறுவது..? முழு விவரம் இதோ.

குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம்‌ ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ வாங்கிடும்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த அலங்கார மீன்‌ வளர்ப்பு அலகு (நன்னீர்‌ மீன்களை இனப்பெருக்கம்‌ மற்றும்‌ வளர்த்தல்‌) ரூ.25.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தில்‌ பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது..

மீன்‌ விற்பனை அங்காடி (அலங்கார மீன்‌ வளர்ப்பு/மீன் அருங்காட்சியகம்‌ ஆகியவை உள்ளடங்கியது) ரூ.10.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ அல்லது மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

கொல்லைப்புற அலங்கார மீன்‌ வளர்ப்பு அலகு (கடல்‌ அல்லது நன்னீர்‌) ரூ.3.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ அல்லது மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது..

புதிய மீன்‌ குஞ்சு வளர்ப்பு குளங்கள்‌ ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில்‌அமைத்தல்‌, திட்டத்தினில்‌ ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ‘ஆதிதிராவிடர்‌ மற்றும் மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

புதிய மீன்வளர்ப்பு குளங்கள்‌ ரூ.7.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தினில்‌ ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும் மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

நன்னீர்‌ மீன்வளர்ப்பு குளங்களில்‌ ரூ.4.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மீன்வளர்த்திட உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

சிறிய அளவிலான பயோயிளாக்‌ குளங்களில்‌ ரூ.7.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மீன்‌ வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ அல்லது மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

நன்னீர்‌ மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக்‌ குளங்கள்‌ அமைத்தல்‌ மற்றும்‌ உள்ளீட்டு மானியம்‌ வழங்கும்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கான’ செலவினமானரூ.14.00 இலட்சம்‌ செலவினத்தில்‌ பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பிரிவினருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment