மொபைல் போன் தொலைந்துவிட்டதா? எளிதாக டிராக் செய்து மீட்கலாம்..! மத்திய அரசின் புதிய திட்டம்...!

மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அக்கம்பக்கத்தில் தேடி பார்ப்பீர்கள்... மொபைல் எண்ணுக்கு போன் செய்து பார்ப்பீர்கள்...

கடைசியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிப்பீர்கள். தற்போது இது எதுவுமே இல்லாமல், எளிதாக வலைதளம் மூலமாக 'உங்கள் மொபைல் போன் எங்கே?' என்று கண்டுபிடித்துவிடலாம்.

மத்திய அரசு, மத்திய டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (CDoT) Central Equipment Identity Registry (CEIR) என்ற தொழில்நுட்பத்தை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொழில்நுட்பம் முக்கியமாக மொபைல் போனின் IMEI எண்ணை வைத்து செயல்படுகிறது
.
ஒருவேளை உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டது என்றால் CEIR இணையதளத்தில் மொபைல் போனின் மாடல், IMEI எண், தொலைந்த இடம் மற்றும் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். இத்துடன் மொபைல் போன் திருடுப்போனதாக புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலையும் பதிவிட வேண்டும். இந்த தகவல்களை வைத்து மொபைல் போன் 24 மணி நேரத்தில் டிராக் செய்யவும் முடியும்... மொபைல் போனை முடக்கவும் முடியும். இந்த தொழில்நுட்பத்தின் சோதனை டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment