இன்டர்நெட் சென்டருக்கு சென்று பணம் செலவழிக்காமல்.. ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று நடக்கும் மக்களவை தேர்தலில் வாக்களிக்கப்பதற்காக..
உங்களுடைய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய வேண்டுமா? கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்து உள்ளீர்கள்.
பல்வேறு வகையான முக்கிய ஆவணங்களை, பல்வேறு வகையான ஆன்லைன் தளங்களில் சேமித்து வைத்து, எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவைகளை வசதியாக அணுக முடியும் என்கிற டிஜிட்டல் யுகத்தில் நாம் வாழ்கிறோம். அப்படியான யுகத்தில் டிஜிலாக்கர் ஆப்பிற்கு (DigiLocker App) ஒரு முக்கியமான இடமுண்டு. டிஜிலாக்கர் ஆப் ஆனது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு டிஜிட்டல் லாக்கர் சேவை (Digital Locker Service) ஆகும்.
இது குடிமக்கள் தங்களுடைய முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்கவும், பின்னர் தேவைப்படும் இடங்களில் அவைகளை, மிகவும் எளிமையான முறையில் அணுகவும் உதவுகிறது. இந்த டிஜிலாக்கர் ஆப் வழியாக உங்களுடைய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையையும் (Digital Voter ID Card) பதிவிறக்கம் செய்ய முடியும். அதெப்படி என்பதை விளக்கும் எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:
டிஜிலாக்கர் ஆப்பில் இருந்து டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?
1. உங்களிடம் ஏற்கனவே ஒரு டிஜிலாக்கர் அக்கவுண்ட் இல்லையென்றால், முதல் படியாக.. உங்களுக்கான டிஜிலாக்கர் அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். இதை செய்ய டிஜிலாக்கர் இணையதளத்திற்கு (https://digilocker.gov.in/) சென்று, உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்யவும்.
2. உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு, சரிபார்ப்பிற்காக ஒடிபி ஒன்று அனுப்பிவைக்கப்படும். அதை வைத்து பதிவு செய்வதற்கான செயல்முறையை தொடரவும்.
3. உங்கள் மொபைல் எண் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் போன்ற தேவையான விவரங்களை வழங்குவதன் மூலம் உங்கள் டிஜிலாக்கர் அக்கவுண்ட்டை செட் செய்யவும்.
4. உங்களுக்கான டிஜிலாக்கர் அக்கவுண்ட்டை அமைத்த பிறகு, உங்கள் டிஜிலாக்கர் டாஷ்போர்டிற்குள் லாக்-இன் செய்யவும். பின்னர் இடது பக்க மெனுவில் உள்ள "இஷூடு டாக்குமென்ட்ஸ்" (Issued Documents) பகுதியை கண்டறியவும். அதில் இஷூவர் (Issuer) ஆக எலெக்ஷன் கமிஷன் ஆப் இந்தியா (Election Commission of India) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
5. இப்போது வழங்கப்பட்ட ஆவணங்கள் (Issued Documents) என்கிற பிரிவில், உங்கள் டிஜிட்டல் ஆவணங்களை மீட்டெடுக்கக்கூடிய மையங்களின் பட்டியலை காண்பீர்கள். அந்த பட்டியலிலிருந்து எலெக்ஷன் கமிஷன் ஆப் இந்தியா (Election Commission of India) என்பதை கிளிக் செய்யவும். இப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின்கீழ் கிடைக்கக்கூடிய ஆவணங்களில் உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பட்டியலிடப்பட்டிருப்பதை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.
6. (தேவைப்பட்டால்) டிஜிலாக்கர் உடன் உங்கள் மாநிலத்தின் ஒருங்கிணைப்பை பொறுத்து, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை அணுகுவதற்கு முன், உங்களுடைய விவரங்களை சரிபார்க்க வேண்டியிருக்கும். கேட்கப்பட்டால், உங்களை பற்றிய தகவல்களை சரிபார்க்க ஸ்க்ரீனில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றவும்.
7. உங்கள் விவரங்களை சரிபார்த்த பிறகு, உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய தொடரலாம். உங்கள் டிவைஸில் டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டை சேமிக்க, "டவுன்லோட்" (Download) அல்லது "சேவ்" (Save) என்கிற பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்!
ஒருமுறை பதிவிறக்கம் செய்ததும், உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை எப்போது வேண்டுமானாலும் உங்கள் டிஜிலாக்கர் அக்கவுண்ட் வழியாக அணுகலாம். தேவைக்கேற் அதைப் பார்க்கலாம், பிரிண்ட் செய்யலாம் அல்லது ஷேர் செய்யலாம். டிஜிலாக்கர் ஆப்பிற்கு வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்தவும். இது உங்களுடைய டிஜிலாக்கர் அக்கவுண்டையும், அதில் உள்ள டிஜிட்டல் ஆவணங்களையும்.. அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து தடுக்க உதவும்.
No comments:
Post a Comment