
மீன்கள் என்றாலே தண்ணீரில்தானே வாழும், அது எப்படி தரையில் வாழும்? அதுவும் பாலைவனத்தில்? என்று தோன்றுகிறதா?
ஆம்! மனிதர்களே நீர் இல்லாமல் வாழ முடியாத பாலைவனப்பகுதியில் ஒரு மீன், ஒரு நீர்த்தேக்கத்திலிருந்து பயணம் செய்து இன்னொரு நீர்த்தேக்கத்திற்குச் செல்லும் இடைவெளியில் வாழ்கிறது என்றால் ஆச்சர்யம்தானே. வாருங்கள்! அது எப்படியெல்லாம் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறது என்பதைப் பார்ப்போம்.
ஒருமுறை ப்ரேசிலில் உள்ள Lencois Maranhenses என்றப் பாலைவனத்தில் ஒரு உயிரினம் ஊர்ந்து போனத் தடயத்தை இரண்டு மீனவர்கள் கவனித்திருக்கிறார்கள். சுற்றிலும் பார்க்கையில் எந்தவித உயிரினமும் இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை. அதன்பின்னர் மீன் பிடிக்கும்போதுதான் அந்தத் தடயம் யாருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பாலைவனங்களின் அருகே உள்ள கடல் போன்ற நீர்த்தேக்கங்களில் வாழும் இந்த மீன்கள், அதிக வறட்சியினால் நீர் வற்றியவுடன் வேறு நீர்த்தேக்கத்தைத் தேடிச் செல்கிறது. அப்படி போகும்போது தனது வயிற்றை வைத்து உடம்பை முன் தள்ளி ஊர்ந்துச் செல்கிறது.
No comments:
Post a Comment