கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய ஃபைண்ட் மை டிவைஸ் (Find My Device) நெட்வொர்க்கை வெளியிடத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் தொலைந்து போன போன் அல்லது டிவைஸை எளிதாக ட்ராக் செய்து கண்டுபிடிக்க முடியும்.
இந்த புதிய அப்டேட்டில் ஆக்டிவ் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே உங்கள் தொலைந்து போன ஆண்ட்ராய்ட் ஃபோனைக் கண்டுபிடிக்க முடியும். இது புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட உள்ள மிகப்பெரிய வசதியாகும். ஆப்பிள் ஐபோன்யில் உள்ள வசதியைப் போலவே ஆண்ட்ராய்டிலும் கொண்டு வரப்படுகிறது.
புதிய ஃபைண்ட் மை டிவைஸ் எப்படி பயன்படுத்துவது?
ப்ளூடூத் ப்ராக்ஸிமிட்டியைப் பயன்படுத்தி உங்களுக்கு அருகிலுள்ள டிவைஸை கண்டறியலாம். இது ஆப்பிளின் 'Find My' நெட்வொர்க் எவ்வாறு செயல்படுகிறதோ அது போன்று செயல்படும். இருப்பினும், உலகளாவிய ஆண்ட்ராய்டு சாதனங்களின் பிரபலத்தைக் கருத்தில் கொண்டு ஆப்பிளை விட கூகிளின் நெட்வொர்க் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம். தொலைந்து போன பொருளின் அருகில் அதிக சாதனங்கள் இருந்தால், அதைக் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ பயனர்கள் தங்கள் சாதனங்கள் பவர் ஆப் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றைக் கண்டறிய முடியும் என்று கூகுள் கூறுகிறது. மே மாதம் முதல் இந்த வசதி பயன்பாட்டிற்கு வரும் என நிறுவனம் கூறியுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் பெப்பிள்பீ மற்றும் சிப்போலோவிலிருந்து ப்ளூடூத் டிராக்கர்களுடன் டேக் செய்து சாவி, வாலட், லக்கேஜ்களை கண்டுபிடிக்க முடியும் என்று நிறுவனம் கூறியது.
இந்த ஆண்டில், Eufy, Jio, Motorola மற்றும் பிற நிறுவனங்கள் புதிய Find My Device நெட்வொர்க்கை ஆதரிக்கும் சொந்த ப்ளூடூத் டிராக்கர்களை அறிமுகப்படுத்த உள்ளன என்றும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment