இனி UPI மூலமே பணம் டெபாசிட் செய்யலாம்... ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு

UPI முதன்மையாக ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு செய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்கள், பில் பேமெண்ட்கள், வணிக ட்ரான்ஷாக்ஷன் மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது இந்த சமீபத்திய அறிமுகத்தை அடுத்து உங்களால் ATM அல்லது டெபிட் கார்டு இல்லாமல் UPI பயன்படுத்தி கேஷ் டெபாசிட் மெஷின்களில் (Cash Deposit Machines - CDMs) பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.

இந்தியாவில் UPI குறிப்பிடத்தக்க பிரபலத்தை அடைந்துள்ளது. அதன் சௌகரியம், வேகம் மற்றும் எங்கிருந்தபடியும் அதனை பயன்படுத்துவதற்கான அனுமதி மூலமாக இது இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட்கள் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அளித்து வருகிறது. இந்த அமைப்பு எப்படி வேலை செய்யும் என்பது சம்பந்தப்பட்ட தகவல்களை கூடிய விரைவில் RBI வெளியிடும்.

கேஷ் டெபாசிட் வசதிக்கு UPI-ஐ எனேபிள் செய்தல் :

வங்கி கிளைகளில் பணத்தை கையாளும் சுமையை குறைக்கும் அதே வேளையில் கஸ்டமர்களின் சௌகரியத்தை மேம்படுத்துவதற்காக வங்கிகளில் கேஷ் டெபாசிட் மெஷின்களை வைக்கப்பட்டுள்ளதாக RBI கவர்னர் கூறியுள்ளார்.

இந்த கேஷ் டெபாசிட் வசதியை பயன்படுத்துவதற்கு தற்போது ஒருவர் டெபிட் கார்டுகளை மட்டுமே உபயோகிக்க முடியும். இந்தியாவில் UPI மிகவும் பிரபலமடைந்து, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் UPI பயன்படுத்தி கார்டு இல்லாமலேயே பணத்தை டெபாசிட் செய்வதற்கான வசதியை தற்போது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது.

கேஷ் டெபாசிட் மெஷின்கள் :


கேஷ் டெபாசிட் மெஷின்கள் அல்லது CDM-கள் என்பது நேரடியாக உங்களுடைய பேங்க் அக்கவுண்டில் பணத்தை டெபாசிட் செய்ய அனுமதிக்கும் ATMகள் ஆகும். வங்கியில் மணிகணக்கில் நேரத்தை செலவிடாமல் நேரடியாக பணத்தை டெபாசிட் செய்வதற்கான ஒரு சௌகரியமான வழியாக இது அமைகிறது.

யுபிஐ :


நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிமுகப்படுத்திய ஒரு ரியல் டைம் பேமெண்ட் சிஸ்டம் இந்த யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்பேஸ் (UPI). மொபைல் பிளாட்ஃபார்ம் பயன்படுத்தி இரண்டு பேங்க் அக்கவுண்டுகள் இடையே பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு இந்த வசதி அனுமதிக்கிறது. இதற்கு பணத்தை பெறக்கூடிய பேங்க் அக்கவுண்டின் விவரங்கள் தேவை இல்லை.

அக்கவுண்ட் நம்பர், IFSC கோட் போன்ற வழக்கமான வங்கி சார்ந்த விவரங்கள் இல்லாமல் பேமெண்ட் செயல் முறையை UPI எளிமையாக்குகிறது. வர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸ் (VPAs), மொபைல் நம்பர்கள் அல்லது QR கோடுகள் மூலமாக இதில் பேமெண்ட் செய்யப்படுகிறது. ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்வது மட்டுமல்லாமல் UPI மூலமாக ஒருவர் யுட்டிலிட்டி பில்கள், மொபைல் ரீசார்ஜ் மற்றும் பல்வேறு வகையான ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம்.

No comments:

Post a Comment