8TH TAMIL இயல் –1 தமிழ் வரிவடிவ வளர்ச்சி ONE MARK QUESTION AND ANSWER

1. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ............ என்பர்.

அ)   வரி எழுத்துநிலை 
ஆ)  ஒலி எழுத்து நிலை
இ)    வரிவடிவ நிலை 
ஈ)     ஒலிவடிவ நிலை

2. கல்வெட்டுகள் ......... நூற்றாண்டு முதல் நமக்குக் கிடைக்கின்றன.

அ) கி.மு. மூன்றாம் 
ஆ) கி.மு. இரண்டாம்
இ) கி.பி. இரண்டாம் 
ஈ) கி.பி மூன்றாம்

3. செப்பேடுகள் ......... நூற்றாண்டு முதல் நமக்குக் கிடைக்கின்றன.

அ) கி. மு. மூன்றாம் 
ஆ) கி.பி. மூன்றாம்
இ) கி.பி. ஆறாம் 
ஈ) கி.பி. ஏழாம்

4. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை ............ வகையாகப் பிரிக்கலாம்.

அ) இரண்டு 
ஆ) மூன்று 
இ) ஐந்து 
ஈ) ஆறு

5. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து.

அ) பிராமி எழுத்து 
ஆ) கண்ணெழுத்து
இ) வட்டெழுத்து 
ஈ) தமிழெழுத்து

6. சேர, பாண்டிய மண்டலங்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டுவரை கிடைத்த சாசனங்களில் ........... எழுத்துகளே இடம்பெற்றுள்ளன.

அ) பிராமி எழுத்து 
ஆ) கண்ணெழுத்து 
இ) வட்டெழுத்து 
 ஈ) தமிழெழுத்து

7. கடைச்சங்கக் காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் ....... என்று அழைக்கப்பட்டன.

அ) பிராமி எழுத்து 
ஆ) கண்ணெழுத்து
அ) வட்டெழுத்து 
ஈ) தமிழெழுத்து

8. ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ எனக் கண்ணெழுத்து பற்றிக் குறிப்பிடும் இலக்கியம்.

அ) அகநானூறு 
ஆ) பதிற்றுப்பத்து
இ) சிலப்பதிகாரம் 
ஈ) திருமுறைகள்

9. பொருந்தான ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) கற்சிலை 
ஆ) கற்பாறை 
இ) செப்பேடு 
ஈ) ஓலை

(விடையாக உள்ளது தவிர, ஏனையவை பழங்கலத்தில் எழுதி வைக்கப்பட்டவை)

10. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என்பதற்கான சான்று ............... இல் உள்ளன.

அ) கழுகுமலைக் கல்வெட்டு 
ஆ) அரச்சலூர் கல்வெட்டு
இ) ஆதிச்ச நல்லூர் கல்வெட்டு 
ஈ) உத்திரமேரூர் கல்வெட்டு

11. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைத் செய்தவர்.

அ) வீரமாமுனிவர் 
ஆ) பெரியார்
இ) ஜி.யு. போப் 
ஈ) பெருஞ்சித்திரனார்

12. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற .............. காரணமாக அமைந்தது.

அ) ஓவியக்கலை 
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை 
ஈ) நுண்கலை

13. .............. இல் நிறுத்தற் குறிகளும் பத்திப் பிரித்தலும் கிடையாது.

அ) கல்வெட்டில் 
ஆ) செப்பேடுகளில்
இ) ஓலைச் சுவடிகளில் 
ஈ) கற்பாறைகளில்

14. எகர, ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யாருடைய காலம் முதல் இருந்து வந்துள்ளது.

அ) அகத்தியர் 
ஆ) தொல்காப்பியர்
இ) பவனந்தி முனிவர் 
ஈ) வீரமாமுனிவர்

15. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்.

அ) வீரமாமுனிவர் 
ஆ) பெரியார்
இ) ஜி.யு. போப் 
ஈ) பெருஞ்சித்திரனார்

No comments:

Post a Comment